மூக்குத்தி அம்மன் படத்தை தடை செய்யக் கோரி புகார்!

 

மூக்குத்தி அம்மன் படத்தை தடை செய்யக் கோரி புகார்!

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கும் படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, நயன் தாரா, நடிகை ஊர்வசி, மௌலி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை எல்.கே.ஜி படத்தை தயாரித்த ஜசரி கணேசனின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. மூக்குத்தி அம்மன் படம் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி அன்று ஓடிடி இணையதளத்தில் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஆடிக்குத்து என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானது. இதைத் தமிழ்த் திரையுலகின் மூத்த பாடகிகளில் ஒருவரான எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருந்தார்.

மூக்குத்தி அம்மன் படத்தை தடை செய்யக் கோரி புகார்!

இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தை தடை செய்யக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையிடம் சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் புகார் மனு வழங்கியுள்ளனர். சிறுபான்மை மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் மூக்குத்தி அம்மன் படம் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.