வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி, அதிமுக முன்னாள் அமைச்சர் மீது மோசடி புகார்

 

வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி, அதிமுக முன்னாள் அமைச்சர் மீது மோசடி புகார்

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்பி, முன்னாள் அமைச்சர் மீது தஞ்சாவூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளார்.

வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி, அதிமுக முன்னாள் அமைச்சர் மீது மோசடி புகார்

தஞ்சாவூர் மாவட்டம் தென்கீழ் மங்கலத்தை சேர்ந்தவர் வாசுதேவன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் தனது மாணவர்கள் சிலருக்கு வேலை வாங்கி தரும்படி, கடந்த 2018 ஆம் ஆண்டு கரந்தையை சேர்ந்த அதிமுக நிர்வாகி பஞ்சாபிகேசனை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு அவர், அப்போது எம்.பி ஆக இருந்த பரசுராமனிடம் சிபாரிசு கடிதம் பெற்று அரசு வேலை வாங்கி தர தயார் என்றும், அதற்கு ரூ.15 லட்சம் தர வேண்டும் எனவும் கேட்டுள்ளார். அதன்படி 14 இளைஞர்களிடம் ரூ.15 லட்சம் பெற்று பஞ்சாபிகேசனிடம் கொடுத்துள்ளார் வாசுதேவன். இதனையடுத்து, அவருக்கு பரசுராமனிடமிருந்து சிபாரிசு கடிதத்தையும் வாசுதேவன் பெற்று தந்துள்ளார். ஆனால் பணம் கொடுத்த யாருக்கும் வேலை கிடைக்காததால், வாசுதேவனை சந்தித்த பஞ்சாபிகேசன், மாணவர்களின் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, தஞ்சாவூர் நகர கிழக்கு காவல்நிலையத்தில் பஞ்சாபிகேசன் மீது வாசுதேவன் புகார் அளித்துள்ளார். உடனே பஞ்சாபிகேசன், அந்த பணத்தை முன்னாள் எம்பி பரசுராமனிடம் பணத்தை கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதேபோல் கடந்த 2017 ஆம் ஆண்டு கால்நடை துறையில் வேலை வாங்கி தரக்கோரி கால்நடை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளரிடம் பணத்தை கொடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திடமும் 10 பேருடைய நேர்முக தேர்வு கடிதம் மற்றும் ரூ.10 லட்சத்தை வழங்கியதாகவும், இதுவரை அவர்களுக்கு வேலை வாங்கி தரவில்லை எனவும் வாசுதேவன் தனது கடிதத்தில் அடுக்கடுக்காக புகார் தெரிவித்துள்ளார்