சென்னை மக்கள் புகாரளிக்க வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிப்பு!

சென்னை மக்கள் புகாரளிக்க வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிப்பு!

சென்னை மக்கள் புகார் அளிக்க வாட்ஸ் ஆப் எண்களை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.

சென்னையில் மக்கள் தொகை அதிகம் என்பதாலும் வளர்ச்சியடைந்த நகரம் என்பதாலும் சென்னைக்கு வர வேண்டும் என்பதே பலரின் விருப்பம். நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருக்க குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அதனால் சென்னை காவலர் ஆணையராக இருந்த ஏகே விஸ்வநாதன் பல இடங்களில் சிசிடிவி கேமராவை பொறுத்தும் முறையை அமல்படுத்தினார். அதனைத்தொடர்ந்து தமிழகத்தின் பல இடங்களில் கேமராக்கள் பொறுத்தப்பட்டது. தற்போது காவல் ஆணையராக இருக்கும் மகேஷ்குமார் அகர்வாலும், சென்னை மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

சென்னை மக்கள் புகாரளிக்க வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிப்பு!

சென்னையில் மக்கள் காவல்துறையை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்னும் முறை ஏற்கனவே அமலில் இருக்கிறது. இந்த நிலையில், தற்போது சென்னையில் 12 மாவட்ட காவல் துணை ஆணையர்களிடம் வாட்ஸ் ஆப் எண்கள் மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் ஒவ்வொரு பகுதிக்கும் தனிதனியாக புகார் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

சென்னை மக்கள் புகாரளிக்க வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிப்பு!

பரங்கி மலை- 70701 10833, அடையாறு- 87544 01111, தி.நகர்- 90030 84100, மயிலாப்பூர்- 63611 00100, திருவல்லிக்கேணி- 94981 81387, கீழ்ப்பாக்கம்-9980 10650, பூக்கடை- 94980 08577, வண்ணாரபேட்டை- 94981 33110, மாதவரம்- 94981 81385, புளியந்தோப்பு- 63694 2345, அண்ணா நகர்- 91764 26100, அம்பத்தூர்-91764 27100 ஆகிய வாட்ஸ் ஆப் எண்களில் புகார் அளிக்கலாம்.

சென்னை மக்கள் புகாரளிக்க வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிப்பு!
சென்னை மக்கள் புகாரளிக்க வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிப்பு!