‘பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்’ : சென்னையில் புயல் குறித்த புகார் எண்கள் இதோ!

‘பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்’ : சென்னையில் புயல் குறித்த  புகார் எண்கள் இதோ!

நிவர் புயல் பாதிப்பு குறித்து சென்னை மக்கள் புகாரளிக்க வேண்டிய எண்களை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

‘பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்’ : சென்னையில் புயல் குறித்த  புகார் எண்கள் இதோ!

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயலால், சென்னையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தேனாம்பேட்டை, தி.நகர், அண்ணா சாலை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருவதால் சென்னை மக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், ஒரு நாள் பெய்த மழைக்கே வட சென்னை நீரில் தத்தளித்து. சாலையில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். தற்போது நிவர் புயலால் சென்னைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை, மக்களிடையே அச்சத்தை அதிகரிக்க செய்துள்ளது.

‘பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்’ : சென்னையில் புயல் குறித்த  புகார் எண்கள் இதோ!

இந்த நிலையில், தாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கி இருக்கவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். பருவமழை தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் மக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை, நிலைமை கட்டுக்குள் தான் உள்ளது என்றும் 200 வார்டுகளில் மாநகராட்சி ஊழியர்களும் 600 தண்ணீர் வெளியேற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சென்னை மக்கள் 1913 என்ற எண்ணிலும், 044-2538 4530, 044-2538 4540 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என அறிவித்துள்ளார்.