அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது புகார்!

 

அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது புகார்!

தலைவாசல் சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அடித்து நொறுக்கியதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சார்பில் நேற்று மாநாடு நடைபெற்றது. தமிழர் வேலை தமிழருக்கே என்ற தலைப்பில் நடந்த அந்த மாநாட்டில் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து வாகனத்தில் வந்த தொண்டர்கள் மாநாட்டில் குவிந்தனர். மாநாடு நேற்று இரவு 9 மணிக்கு முடிந்த நிலையில், தொண்டர்கள் அனைவரும் வந்த வாகனத்திலேயே சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர். அந்த வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என தெரிகிறது.

அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது புகார்!

சேலத்திலிருந்து தலைவாசல் வழியாக கடலூருக்கு வாகனம் ஒன்று சென்றுள்ளது. தலைவாசல் சுங்கச்சாவடியில் பணம் செலுத்த சொன்னதால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாகனத்தில் சென்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாற, வாகனத்தில் சென்றவர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியுள்ளனர். இது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள், காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கும் நிலையில், அவர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியவர்கள் தனது கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை என அடித்துச் சொல்லியிருக்கிறார். அதற்கான ஆதாரம் ஒன்றும் இல்லை என்றும் இந்த விவகாரம் குறித்து தான் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.