ஹெச் ராஜா மீது மாற்றுதிறனாளிகள் சங்கம் சார்பில் புகார்

 

ஹெச் ராஜா மீது மாற்றுதிறனாளிகள் சங்கம் சார்பில் புகார்

பா.ஜ.க சார்பில் தமிழகத்தில் வேல்யாத்திரை நடைபெற்றுவரும் சூழ்நிலையில் இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடைவிதித்தது. இருப்பினும் கடந்த 6 ஆம் தேதி திருத்தணியில் வேல் யாத்திரையை தொடங்கிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தற்போது வரை பல்வேறு இடங்களில் தடையை மீறி யாத்திரையை மேற்கொண்டுவருகிறார். அப்போது அந்த யாத்திரையில் கலந்துகொண்டு பேசிய ஹெச்.ராஜா, தமிழக அரசு நொண்டி சாக்கு கூறி யாத்திரைக்கு அனுமதி அளிக்க மறுக்கிறது என பேசினார். மேலும் இதுபோன்று டுவிட்டரிலும் பதிவு செய்தார்.

ஹெச் ராஜா மீது மாற்றுதிறனாளிகள் சங்கம் சார்பில் புகார்

இது மாற்றுதிறனாளிகளின் மனதை புண்படுத்துவதாக இருப்பதாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது 2016 ஆண்டு சட்டத்தின் 92 வது பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அரியலூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்படுள்ளது.

முன்னதாக கொரோனா பரவல் ஏற்படும் பாதிப்பு இருப்பதால் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. மேலும் வேல் யாத்திரையை பாஜக விளம்பரத்திற்காக நடத்துவதாகவும், இதனால் மக்களுக்கும் நாட்டிற்கும் எந்த பலனும் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.