Home சினிமா நடிகர் ஆர்யா மீது புகார்- சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ஆர்யா மீது புகார்- சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் மீதான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ஆர்யா மீது புகார்- சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Arya-Sayyeshaa blessed with a baby girl, Vishal says 'great to be an uncle'  | Entertainment News,The Indian Express

திருமணம் கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஆர்யாவுக்கு எதிராக ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் சிபிசிஐடியிடம் புகார் அளித்திருந்தார்.

கடந்த மார்ச் மாதம் கொடுக்கப்பட்ட இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிடக்கோரி, விட்ஜா சார்பில் அவரது பொது அதிகாரம் பெற்ற ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த நடிகர் ஆர்யா தன்னிடம் 70 லட்சத்திற்கு ரூபாய் மேல் பணம் பெற்றுக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

பணத்தை திரும்ப கேட்ட போது, தன்னுடைய வீட்டுக்கடன் அனைத்தையும் செலுத்தி விடுவதாக மணப்பெண்ணும் நடிகையுமான சாயிஷா பெற்றோர் உறுதியளித்ததால் மட்டுமே திருமணத்துக்கு சம்மதித்ததாகவும், 6 மாதத்தில் விவாகரத்து பெற்று தன்னை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

Defamation case filed against Arya after nine years | Tamil Movie News -  Times of India

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் அரண்மனை-3, இரண்டகம் என்ற மலையாள படம் வெளியானால் தனக்கு வர வேண்டிய பணம் கிடைக்காமல் போகும் என வாதிட்டார்.

மேலும், சிபிசிஐடியிடம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

புகார் மீதான தற்போதைய நிலை குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி விசாரணையை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

நடிகர் ஆர்யா மீது புகார்- சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

பரு வந்தவங்க அதை குறுகுறுன்னு பார்க்காம ,விறு விறுன்னு இதெல்லாம் செய்யுங்க

பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனையுடன் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.  டீன் ஏஜினரை பாடாய்ப்படுத்தும் பிரச்னை....

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் தேஜஸ்வி யாதவ்

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுத்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் தேஜஸ்வி யாதவ் களம் இறங்கியுள்ளார். சாதி அடிப்படையில் மக்கள்...

வருவாய் அதிகரிப்பு எதிரொலி… பாரத் போர்ஜி் லாபம் ரூ.153 கோடி….

பாரத் போர்ஜ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.153 கோடி ஈட்டியுள்ளது. வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பாரத்...

ஆல்-ரவுண்டராக அசத்திய மேக்ஸ்வெல், ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்! பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 39-வது லீக் ஆட்டமானது துபாய் சர்வதேச மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றது.
TopTamilNews