ஹெச்.ராஜாவுக்கு எதிராக புகாரளித்தவர்கள் கட்சியிலிருந்து நீக்கம்!!

 

ஹெச்.ராஜாவுக்கு எதிராக புகாரளித்தவர்கள் கட்சியிலிருந்து நீக்கம்!!

ஹெச். ராஜாவுக்கு எதிராக புகார் அளித்த பாஜக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஹெச்.ராஜாவுக்கு எதிராக புகாரளித்தவர்கள் கட்சியிலிருந்து நீக்கம்!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹெச்.ராஜா தோல்வியை தழுவினார். இதனால் தனது தோல்விக்கு சில பாஜக நிர்வாகிகள் தான் காரணம் என அவர் குற்றம் சாட்டினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த காரைக்குடி பாஜக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். அத்துடன் தேர்தல் செலவுக்காக கொடுக்கப்பட்ட பணத்தை செலவழிக்காமல் கையாடல் செய்து விட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். சுப்பிரமணியபுரத்தில் ரூ.4 கோடி மதிப்பில் வீடு கட்டி வரும் ஹெச்.ராஜா , தேர்தல் பணத்தை எடுத்து எருமைப்பட்டி தோட்டத்தில் பண்ணை வீடு கட்டுமான பணிகளில் செய்து வருவதாகவும் அவர்கள் கூறினர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஹெச்.ராஜா மீது வைத்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்திருந்தார்

ஹெச்.ராஜாவுக்கு எதிராக புகாரளித்தவர்கள் கட்சியிலிருந்து நீக்கம்!!

இதுகுறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மண்டல தலைவர் சந்திரன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார் . ஆகவே மாநில தலைவர் எல்.முருகன் அவர்களின் ஒப்புதலுடன் கட்சியின் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார். ஆகவே கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதைப்போல் சிவகங்கை மாவட்ட மற்றொரு பாஜக நிர்வாகியான பிரபு என்பவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பிரபு சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி மண்டல தலைவராக செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.