பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், வீடு கட்டும் பணிக்கு வராத மேஸ்திரியை கேள்வி கேட்ட வீட்டு உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவம் குன்றத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாங்காடு அடுத்த கோவூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். கடைக்கு அருகில் உள்ள தனது இடத்தில், சொந்தமாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்.
அதற்காக, அதே பகுதியை சேர்ந்த மேஸ்திரி குமார் என்பவரிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். கொரோனா காலம் காரணமாக நிறுத்தப்பட்ட கட்டுமான பணிகளை , மீண்டும் தொடங்குவது தொடர்பாக மேஸ்திரி குமாரிடம் ஜெயக்குமார் கேட்டுள்ளார். அதற்கு, மேலும் 50 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் இல்லை என்றால் வீட்டை கட்ட முடியாது என குமார் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரம் அடைந்த குமார் அவரது மகன் மற்றும் உறவினரை அழைத்து கொண்டு ஜெயக்குமார் கடைக்கு சென்று தகராறு செய்ததுடன், ஜெயக்குமாரின் உறவினர் அருண்குமார் என்பவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.
வீட்டு உரிமையாளரை தாக்கிய மேஸ்திரி-சிசிடிவி காட்சிகளுடன் போலீசில் புகார்!#homeownerassault #Mankadu #policeinvestigation pic.twitter.com/rJcfmw5edG
— Top Tamil News (@toptamilnews) October 7, 2020
இது குறித்து மாங்காடு போலீசில் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.