கடலூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு! – ஸ்டாலின் வலியுறுத்தல்

கடலூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு! – ஸ்டாலின் வலியுறுத்தல்

கடலூர் மாவட்டத்தில் பட்டாசு தயாரிப்பு விபததில் பலியான பெண்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு! – ஸ்டாலின் வலியுறுத்தல்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி என்ற இடத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று பட்டாசு தயாரிக்கு ஆலை செயல்படத் தொடங்கியது. தொடங்கிய முதல் நாளே அங்கு விபத்து ஏற்பட்டு ஒன்பது பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கடலூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு! – ஸ்டாலின் வலியுறுத்தல்

மேலும் பலர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீடில், “கடலூர், குறுங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு விபத்தில் 9 பெண்கள் பலியான செய்தி பெரும் சோகம் தருகிறது. 4 மாதங்கள் வருமானம் இன்றி மீண்டும் தொடங்கிய அன்றே விபத்து ஏற்பட்டிருக்கிறது! தொழிலாளர்களின்

கடலூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு! – ஸ்டாலின் வலியுறுத்தல்

பாதுகாப்பை உறுதிப்படுத்துக; இறந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்குக!” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே உயிரிழந்த பெண்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடலூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு! – ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக முதல்வரே ஏழு பெண்கள் உயிரிழந்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், ஒன்பது பெண்கள் இறந்துவிட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.