”செப்டம்பரில் கார் விற்பனை உயர்வு ” மகிழ்ச்சியில் நிறுவனங்கள்!

”செப்டம்பரில்  கார் விற்பனை உயர்வு ” மகிழ்ச்சியில் நிறுவனங்கள்!

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வந்த பெரும்பாலான நிறுவனங்களின் வாகன விற்பனை, செப்டம்பரில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது.

”செப்டம்பரில்  கார் விற்பனை உயர்வு ” மகிழ்ச்சியில் நிறுவனங்கள்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் நாட்டின் பல தொழில்துறையினரையும் முடக்கிப்போட்டது. இதில் வாகன உற்பத்தி துறையும் அடங்கும். வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முற்றிலும் விற்பனை இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நிறுவனங்கள் மீண்டு வர தொடங்கின. இதன் காரசணமாக வாகன விற்பனை படிப்படியாக வளர்ச்சி பெற தொடங்கிய நிலையில், செப்டம்பரில் பெரும்பாலான நிறுவனங்களின் கார் விற்பனை சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது.

”செப்டம்பரில்  கார் விற்பனை உயர்வு ” மகிழ்ச்சியில் நிறுவனங்கள்!

இதில் மாருதி சுசுகி நிறுவனம், செப்டம்பரில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 912 கார்களுடன் 33.9 சதவீத விற்பனை உயர்வை பெற்றுள்ளது. இதேப்போல மற்றொரு முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், செப்டம்பரில், 50 ஆயிரத்து 313 கார்கள் என்றளவில், 23.6 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

”செப்டம்பரில்  கார் விற்பனை உயர்வு ” மகிழ்ச்சியில் நிறுவனங்கள்!

மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம், செப்டம்பரில் 14 ஆயிரத்து 857 கார்கள் என்றளவில் 3.5 சதவீத விற்பனை அதிகரிப்பை கண்டுள்ளது. ஹோண்டா கார்ஸ் நிறுவனம், 10 ஆயிரத்து 199 என்றளவில் 9.7 சதவீத வளர்ச்சியும், டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம், 8 ஆயிரத்து 116 கார்களை விற்பனை செய்து 20 சதவீத வளர்ச்சியும் பெற்றுள்ளது.

  • எஸ். முத்துக்குமார்