6 தொகுதிக்கு ஓகே சொன்ன இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

 

6 தொகுதிக்கு ஓகே சொன்ன இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

சட்டமன்றத் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுக, தொகுதி பங்கீட்டில் படு பிசியாக இருக்கிறது. முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கியாகி விட்டது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

6 தொகுதிக்கு ஓகே சொன்ன இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

மு.க ஸ்டாலின் முதல்முறையாக முதல் வேட்பாளராக களமிறங்கும் தேர்தல் இது. ஆகையால் இதில் எப்படியாவது வென்று வெற்றி வாகையை சூட ஸ்கெட்ச் போட்டிருக்கும் திமுக, தேர்தல் பணிகள் அனைத்தையும் ஐபேக் நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டது. கண் கொத்திப் பாம்பாக ஐபேக் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருப்பதால், திமுகவினர் கூட்டணிக் கட்சிகளிடம் கறாராக இருக்கின்றனர். எந்த கூட்டணிக் கட்சிக்கும் கேட்ட தொகுதிகள் வழங்கப்படவில்லை.

6 தொகுதிக்கு ஓகே சொன்ன இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

வேணும்னா வாங்கிக்கோங்க.. இல்லனா கூட்டணியில் இருந்து விலகிக்கோங்க.. என்பது போலவே திமுகவின் நிலைப்பாடு இருப்பதாக கூட்டணி கட்சியினர் புலம்பித் தவிக்கின்றனர். அதே போல தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும். இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்ட சிபிஐக்கு 6 தொகுதிகள் மட்டுமே கொடுக்க திமுக முன்வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கவுள்ள மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.