இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

 

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

தமிழகத்தையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க, அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசுக்கு, இது மேலும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியிருப்பதால் அரசுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

அவரது கோரிக்கைக்கு இணங்க பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தனியார் நிறுவனங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 10 லட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்காக கொடுத்துள்ளன. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை நேரில் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காசோலையை முதல்வரிடம் வழங்கியுள்ளனர்.

இதற்கு முன்னதாக முதல்வர் நிவாரண நிதிக்கு கலாநிதிமாறன் ரூ.10 கோடி, அதிமுக ரூ.1 கோடி, திமுக அறக்கட்டளை ரூ.1 கோடி, சன் டிவி குழுமம் ரூ.30 கோடி, உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சம், சோஹோ நிறுவனம் ரூ.5 கோடி அளித்திருந்தனர். இதுமட்டுமில்லாமல் தமிழக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்க முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.