கேரளாவில் பறக்கும் பினராயி விஜயனின் கொடி!

 

கேரளாவில் பறக்கும் பினராயி விஜயனின் கொடி!

தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேரளாவிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கேரளாவைப் பொறுத்தவரை ஆளும் இடதுசாரி அணிக்கும் காங்கிரஸ் அணிக்கும் என இருமுனை போட்டியாகவே நிலவியது.

கேரளாவில் பறக்கும் பினராயி விஜயனின் கொடி!

காலையிலிருந்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அப்போதிருந்தே இடதுசாரி முன்னிலை பெற்றது. தற்போது பேலெட் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதிலும் ஆளுங்கட்சிக்கே சாதகமாக இருக்கிறது. 92 இடங்களில் இடதுசாரியும் 45 இடங்களில் காங்கிரஸும் 3 இடங்களில் பாஜகவும் முன்னிலையில் இருக்கின்றன. தமிழகத்தில் 11.30 மணி நிலவரப்படி திமுக 140 இடங்களிலும் அதிமுக 93 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. பெரும்பாலான அமைச்சர்கள் பின்னடைவில் இருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.