‘கொரோனா நோயாளியை சிகிச்சையில் சேர்க்கும் நேரம் 48 மணிநேரத்திலிருந்து 8 மணி நேரமாக விரைவாகியுள்ளது’ சென்னை ஆணையர்

 

‘கொரோனா நோயாளியை சிகிச்சையில் சேர்க்கும் நேரம் 48 மணிநேரத்திலிருந்து 8 மணி நேரமாக விரைவாகியுள்ளது’ சென்னை ஆணையர்

சென்னையில் கொரோனா நோய்த் தொற்று முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் சுமார் 50 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல நோயிலிருந்து குணம் பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

இந்த நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் கொரோனா விழிப்புணர்வு பைக் பிரச்சாரத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று தொடங்கி வைத்து பேசினார்.

‘கொரோனா நோயாளியை சிகிச்சையில் சேர்க்கும் நேரம் 48 மணிநேரத்திலிருந்து 8 மணி நேரமாக விரைவாகியுள்ளது’ சென்னை ஆணையர்

“ஊரடங்கில் எந்த நோய்த்தொற்று என்ன பிரச்சினை கொடுக்கிறது என்பதை வகைப்படுத்துகிறோம். நோய் அறிகுறி அறிய வீடு வீடாகச் சென்று கண்காணித்தது வருகிறோம். இதற்காக ஆயிரக்கணக்கான களப் பணியாளர்கள் பணியில் உள்ளனர்.

இதுதவிர காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில் 11 லட்சம் பொதுமக்கள் இதுவரை முகாமில் கலந்துகொண்டுள்ளனர். நாளொன்றுக்கு 13,000 பேருக்குச் சோதனை நடத்தப்படுகிறது. இதுவரை 5 லட்சம் பேருக்குக் கரோனா பரிசோதனை செய்துள்ளோம்.

நாங்கள் முக்கியமாகக் கையில் எடுத்தது தனிமைப்படுத்துதல் என்று சொல்லக்கூடிய முறை. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்துதலில் வைக்கிறோம். இதுவரை 8.5 லட்சம் பேர் தனிமைப்படுத்துதலில் இருந்துள்ளனர். இன்னும் பலர் இருக்கிறார்கள், புதிதாக வருவார்கள், நாட்கள் முடித்தவர்கள் வீட்டுக்குத் திரும்புவார்கள். இது ஒரு நடைமுறையாகத் தொடர்கிறது.

‘கொரோனா நோயாளியை சிகிச்சையில் சேர்க்கும் நேரம் 48 மணிநேரத்திலிருந்து 8 மணி நேரமாக விரைவாகியுள்ளது’ சென்னை ஆணையர்
(PTI Photo/R Senthil Kumar)(PTI17-03-2020_000204A)

தனி நபர்கள் தனிமைப்படுத்துதலில் இதுவரை 5 லட்சம் பேர் இருந்துள்ளனர். சமீபகாலமாக தொற்று எண்ணிக்கை ஏன் குறைகிறது என்பது முக்கியமான காரணம். இதுபோன்ற நபர்கள் தனிமைப்படுத்துதலில் இருந்தால் பரவல் குறையும். ஒரு நபர் 20 நபர் வரை தொற்று பரவக் காரணமாக இருக்கிறார். சர்வே, காய்ச்சல் முகாம், மேலாண்மை முறை காரணமாக தொற்றுள்ளவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துதலை விரைவுபடுத்தியதால் சாத்தியமானது.

‘கொரோனா நோயாளியை சிகிச்சையில் சேர்க்கும் நேரம் 48 மணிநேரத்திலிருந்து 8 மணி நேரமாக விரைவாகியுள்ளது’ சென்னை ஆணையர்இதற்காக ஒரு கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்தக் கண்காணிப்பு முறை காலை 6 மணிக்கு ஆரம்பிக்கும். தொற்றுள்ள நபர் எந்த வார்டு, தெரு, வீடு என்பதை அந்த ஏரியா ஆய்வாளருக்குக் கொடுத்து எங்கள் கட்டுப்பாட்டில் தொற்றுள்ளவரைக் கொண்டு வருவோம். அவருக்குத் தொற்று கண்டறியப்பட்டால் வாய்ப்பிருந்தால் வீட்டில் தனிமை, முடியாவிட்டால் கோவிட் சிறப்பு முகாம் அல்லது மருத்துவமனை என்று அனுமதிக்கிறோம்.

இந்த நடைமுறையில் முன்னர் நோயாளியை இவ்வாறு சிகிச்சையில் சேர்க்க 2 நாள் வரை ஆகும் நிலை இருந்தது. தற்போது இதை 12 மணி நேரத்திற்குள் நடக்கும் வகையில் கொண்டு சென்றுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.