7-வது பொருளாதார கணக்கெடுக்கும் பணி துவக்கம்

 

7-வது பொருளாதார கணக்கெடுக்கும் பணி துவக்கம்

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் மத்திய அரசின் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய பொருளாதார கணக்கெடுப்பு பணி தொடர்ந்து 4 மாதங்கள் நடைபெற்ற நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் இன்று முதல் மீண்டும் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

7-வது பொருளாதார கணக்கெடுக்கும் பணி துவக்கம்


ஈரோடு மாநகராட்சி பகுதியில் 6 குழுக்களாக பிரிந்து அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் தலா 5 பேர் இடம்பெற்று உள்ளனர். அவர்கள் நேரடியாக வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ளவர்களின் பெயர், தொழில், ஆண்டு வருமானம், செல்போன் எண் உள்ளிட்ட கேள்விகளை கேட்டு, பதிவுசெய்து வருகின்றனர். நிறுவனமாக இருந்தால் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? எவ்வளவு வருமானம்? போன்ற கேள்விகளை கேட்டு பதிவுசெய்து கொள்கின்றனர். இந்த பணி இன்னும் இரண்டு மாதம் தொடர்ந்து நடைபெறும் என்று கணக்கெடுப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

7-வது பொருளாதார கணக்கெடுக்கும் பணி துவக்கம்