• April
    04
    Saturday

Main Area

Main



தமிழில் சாகித்ய அகாடமி சான்றிதழ்! - ஒரு மனதாக முடிவு

sahitya-academy-award
sahitya-academy-award

இனி வரும் காலங்களில் தமிழுக்கான விருது பெறும் சாகித்ய அகாடமி விருது சான்றிதழை தமிழில் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

sahitya-award


இது தொடர்பாக சாகித்ய அகாடமி பொதுக் குழு உறுப்பினரும் எழுத்தாளருமான பாரதி பாலன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இன்று (பிப்ரவரி 25) புதுடெல்லியில் சாகித்ய அகாடமி பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில், சாகித்ய அகாடமி விருது சான்றிதழ் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வழங்கப்பட்டு வருகிறது. இதை அந்தந்த மொழியிலும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நீண்ட விவாதத்துக்குப் பிறகு அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது சான்றிதழில் தமிழ் இடம் பெறும்" என்று கூறியுள்ளார்.

 

2018 TopTamilNews. All rights reserved.