சிறுவன் காதில் புகுந்த விளையாட்டு துப்பாக்கி குண்டு… சாதுர்யமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்…

 

சிறுவன் காதில் புகுந்த விளையாட்டு துப்பாக்கி குண்டு… சாதுர்யமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்…

கோவை

கோவையில் சிறுவனின் காதில் சிக்கிக் கொண்ட விளையாட்டு துப்பாக்கி குண்டை, சாதுர்யமாக அகற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிபவர் கலைச்செல்வி. இவரது 11 வயது மகன் கிஷோர். இவர் அங்குள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று கணேஷ் சிறுவர்களுடன், பொம்மை துப்பாக்கியால் சுட்டு விளையாடி கொண்டிருந்தார்.

சிறுவன் காதில் புகுந்த விளையாட்டு துப்பாக்கி குண்டு… சாதுர்யமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்…

அப்போது, எதிர்பாராத விதமாக அவரது காதில் துப்பாக்கி குண்டு புகுந்து கொண்டது. இதனால் வலியால் துடித்த சிறுவனை, அவரது பெற்றோர் கோவை அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்த போது, அவரது காதில் தோட்டா சிக்கியிருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, சிறுவனின் காதுசவ்வில் பாதிப்பு ஏற்படாத வகையில் குண்டை எடுக்க திட்ட மருத்துவர்கள், இதற்காக கிஷோரின் காதில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அப்போது, தண்ணீரில் குண்டு லாவகமாக வெளியேறியது. இதனால், சிறுவன் வலி நீங்கி நலம் பெற்றார். அரசு மருத்துவர்களின் இந்த சமயோஜித செயல், அனைவரது பாராட்டுதலையும் பெற்றுள்ளது.