வால்பாறை நகராட்சியில் ரூ.15.62 கோடி முறைகேடு… முன்னாள் நகராட்சி ஆணையர் மீது வழக்குப்பதிவு…

 

வால்பாறை நகராட்சியில் ரூ.15.62 கோடி முறைகேடு… முன்னாள் நகராட்சி ஆணையர் மீது வழக்குப்பதிவு…

கோவை

வால்பாறை நகராட்சியில் ரூ.15 கோடியே 62 லட்சம் முறைகேடு செய்ததாக, நகராட்சி முன்னாள் ஆணையர் பவுன்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி ஆணையராக இருந்தவர் பவுன்ராஜ். இவர் மீது வால்பாறை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகம், கோவை ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், சட்ட விரோதமாக ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் வழங்கி, கோடிக்கணக்கில் பணம் விடுவித்துள்ளதாகவும், இது அதிமுக வேட்பாளரின் தேர்தல் செலுவுக்கு பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த புகார் மீது கோவை ஆட்சியர் நாஜராஜன் பரிந்துரையின் பேரில், நகராட்சிகளின் மண்டல இயக்குநர் அண்ணாமலை விசாரணை மேற்கொண்டார். அதில், புகாரின் மீது முகாந்திரம் இருப்பது தெரியவந்ததால், பவுன்ராஜ் மீது கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து, நகராட்சி தணிக்கை குழு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வால்பாறை நகராட்சி அலுவலகம் மற்றும் ஆணையர் பவுனராஜ் தங்கியிருந்த விடுதி அறையில் சோதனையில் ஈடுபட்டனர்.

வால்பாறை நகராட்சியில் ரூ.15.62 கோடி முறைகேடு… முன்னாள் நகராட்சி ஆணையர் மீது வழக்குப்பதிவு…

இந்த சோதனையில், முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆவணஙகள் பறிமுதல செய்யப்பட்டது. மேலும், நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு, 15 கோடியே 62 லட்சம் பணத்தை விடுவித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் பவுன்ராஜ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். தொடர்ந்து, பொள்ளாச்சி நகராட்சி ஆணையர், கூடுதலாக வால்பாறை ஆணையராக நியமிக்கப்பட்டார்..

இந்த நிலையில், முன்னாள் நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் மீது நம்பிக்கை மோசடி, ஊழல் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கோவை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த புகாரில் தொடர்புடைய ஒப்பந்ததாரர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ள