'கோமாளி' படத்தில் பஜ்ஜி கடை பெண்ணாக வரும் நடிகை யார் தெரியுமா?

கவிதா ராதேஷியாம்
கவிதா ராதேஷியாம்


ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கோமாளி. இதில் காஜல் அகர்வால் ஹீரோயின்னாக நடிக்க இயக்குநர் பிரதீப் படத்தை இயக்கியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி 16 ஆண்டுகள் கழித்து கோமாவில் இருந்து  2016ல் தான் கண் விழிக்கிறார்.  

ttn

அதன் பின்னர் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் அவர் தான் சிறு வயதில் அனுபவித்த  விஷயங்கள் எதுவும் தற்போது இல்லை என்பது தெரியவர அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்பதே படத்தின் கதை. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

ttn

இந்நிலையில் இந்த படத்தில் பஜ்ஜி கடை பெண்ணாக நடித்தவர் நடிகை கவிதா ராதேஷியாம். பாலிவுட் நடிகரான இவர்  இந்தி பிக் பாஸ் சீசன் 6 இல் பங்கேற்ற போட்டியாளர்களின் ஒருவராவார். பிக் பாஸ் பங்கேற்ற இவருக்கு கோமாளி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

तिखी तिखी White 🙈🙈🙈

A post shared by Kavita Radheshyam (@actresskavita) on

இவர் முன்னதாக தமிழில் காசுரன் படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர்  ஜித்தா மோஹன் இயக்கியுள்ளார்.   நடிகர் ஸ்ரீ,அங்கன அர்யா, ஸ்ரீனிவாசன், அவினாஷ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.