darbar
  • January
    17
    Friday

Main Area

Main



4 நாளில் கோமாளி பட வசூல் இத்தனை கோடியா?

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

சென்னை: கோமாளி பட வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கோமாளி. இதில் காஜல் அகர்வால் ஹீரோயின்னாக நடிக்க இயக்குநர் பிரதீப் படத்தை இயக்கியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி 16 ஆண்டுகள் கழித்து கோமாவில் இருந்து  2016ல் தான் கண் விழிக்கிறார். 

அதன் பின்னர் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் அவர் தான் சிறு வயதில் அனுபவித்த  விஷயங்கள் எதுவும் தற்போது இல்லை என்பது தெரியவர அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்பதே படத்தின் கதையாகும். படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவான கருத்துக்களையே கூறிவருகின்றனர். 

comali

இந்த நிலையில் இந்த படம் சென்னையில் மட்டுமே 4 நாட்களில் ரூ.1.7 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.  அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இந்த படம் ரூ.18.8 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றனர். இதை ஜெயம் ரவி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.