நிறம் மாறும் ஸ்மார்ட்போன்-அறிமுகப்படுத்த விவோ திட்டம்

 

நிறம் மாறும் ஸ்மார்ட்போன்-அறிமுகப்படுத்த விவோ திட்டம்

ஸ்மார்ட்போன் பின்புற பேனல் ஒரே வண்ணத்தில் பார்த்து போரடித்துவிட்டதா? கவலையை விடுங்க. , நிறம் மாறும் பேனல் கொண்ட போனை விவோ நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

நிறம் மாறும் ஸ்மார்ட்போன்-அறிமுகப்படுத்த விவோ திட்டம்

என்னதான் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து போன் வாங்கினாலும், ஒரே மாதிரியான பேக் கவர் பயன்படுத்த பலரும் விரும்புவதில்லை. இதனால் கலர் கலராக பேக் கவர்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனாலும் சில போன்களுக்கு ஏற்ற வகையில் பேக் கவர்கள் கிடைப்பதில்லை. இந்த குறையை கருத்தில் கொண்டு ஒரு ஸ்விட்சை அழுத்தினால் பேனலின் நிறம் மாறும் வகையில் ஒரு செல்போனை விவோ நிறுவனம் தயாரித்து வருகிறது.

நிறம் மாறும் ஸ்மார்ட்போன்-அறிமுகப்படுத்த விவோ திட்டம்

எலக்ட்ரோ குரோமிக் கிளாஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த பேனல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த போனில் உள்ள ஒரு ஸ்விட்சை அழுத்தினால், வெள்ளை நிறத்தில் இருந்து நீளமாக பேனல் மாறிவிடுகிறது. இது தொடர்பான டெமோ வீடியோவை விவோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ யூடியூப்பில் காண கிடைக்கிறது. இந்த நிறம் மாறும் பேனல் கொண்ட போன்கள் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து தகவல் வெளியாக வில்லை.

S.முத்துக்குமார்