ஈரோடு மாவட்டத்தில் கல்லூரிகள் திறப்பு… 9, 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு…

 

ஈரோடு மாவட்டத்தில் கல்லூரிகள் திறப்பு… 9, 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு…

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 11 மாதங்களுக்கு பிறகு இன்று அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டது. அதேபோல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கியது.

தமிழக அரசின் அறிவிப்பின் படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இன்று முதலாமாண்டு, இரண்டாமாண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கியது. இதனையொட்டி, முகக் கவசம் அணிந்து வந்த மாணவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, வகுப்பு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். சில தனியார் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு, இறுதி ஆண்டு மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கல்லூரிகள் திறப்பு… 9, 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு…

இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் என 403 பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கின. நீண்ட நாட்கள் கழித்து வகுப்புகள் திறக்கப்பட்டதால், காலை 8 மணியளவில் பெற்றோர்கள் உடன் மாணவர்கள் பள்ளிக்கு உற்சாகமாக வந்தனர். முக கவசம் அணிந்து வந்திருந்த மாணவர்களுக்கு, கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவிய பின்னர் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்த மாணவ மாணவிகளுக்காக விடுதிகளும் இன்று முதல் செயல்படத் தொடங்கியது.