வெளி மாநிலத்தில் இருந்து கோவை வரும் கல்லூரி மாணவர்கள், 10 நாட்கள் தனிமைப் படுத்திக்கொள்ள ஆணை!

 

வெளி மாநிலத்தில் இருந்து கோவை வரும் கல்லூரி மாணவர்கள், 10 நாட்கள்  தனிமைப் படுத்திக்கொள்ள ஆணை!

கோவை

வெளி மாநிலங்களில் இருந்து கோவையில் உள்ள கல்லூரிகளுக்கு படிக்க வரும் மாணவ, மாணவிகள் 10 நாட்கள் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டுமென மாநகராட்சி ஆணையர் ராஜபோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லூரி விடுதிகளில் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கி படிக்க வரும் அனைத்து மாணவ, மாணவிகளும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம்.

இந்த மாணவ – மாணவியர்கள் அந்தந்த கல்வி நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள விடுதிகளில் வருகை புரிந்தவுடன் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பினும் குறைந்தபட்சம் ஒரு வராதம் (10 நாட்கள்) விடுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு வழிமறைகளை பின்பற்றி தனிமைப்படுத்தி கொள்ளல் வேண்டும்.

வெளி மாநிலத்தில் இருந்து கோவை வரும் கல்லூரி மாணவர்கள், 10 நாட்கள்  தனிமைப் படுத்திக்கொள்ள ஆணை!

அவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்ளாமல் மாணவ, மாணவியர்களை நேரடியாக விடுதிகளில் தங்க அனுமதிக்கும் கல்வி நிர்வாகங்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதுடன், அபராததுமும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் தங்கும் விடுதியில் கேரளாவில் இருந்து வந்து தங்கியிருந்த பல மாணவ- மாணவியர்களுக்கு தொற்று பரவல் கண்டறியப்பட்டு உள்ளது.

எனவே, கல்லூரி நிர்வாகங்கள் அனைத்து மாணவ – மாணவியர்களுக்கும் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.