பப்ஜி விளையாட்டில் தோற்றதால் கல்லூரி மாணவர் தற்கொலை

 

பப்ஜி விளையாட்டில் தோற்றதால் கல்லூரி மாணவர் தற்கொலை

‘பப்ஜி’ என அழைக்கப்படும் விளையாட்டு இளைஞர்கள், சிறுவர்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது.இந்த விளையாட்டு வன்முறையைத் தூண்டுவது போல் அமைந்துள்ளதாகப் பல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு சில கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த விளையாட்டைச் சிறுவர்களும், இளைஞர்களும் விளையாடுவதை நிறுத்தவில்லை. அதே சமயம் இந்த விளையாட்டு மனதளவில் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதும் தற்கொலை, எதிர்ப்பாராத மரணமும் இதனால் ஏற்படுகிறது.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தை அடுத்த டிபி சத்திரம் கேவிஎன் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் நிதிஷ்குமார் (20). தனியார் கல்லூரியில் பிசிஏ படித்து வந்தார். பகுதி நேர வேலையாக ஷெனாய் நகர் 2-வது குறுக்குத் தெருவில் உள்ள “டாட்டு” கடை ஒன்றில் வேலையும் செய்து வந்தார். வேலை காரணமாக கடையிலேயே தங்கி விட்டார். இன்று காலை கடைக்கு வந்த ஊழியர்கள் பார்க்கும் போது நிதிஷ் குமார் கடைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பப்ஜி விளையாட்டில் தோற்றதால் கல்லூரி மாணவர் தற்கொலை

செல்போனில் எப்போதும் நிதிஷ்குமார் கேம் விளையாடி கொண்டிருப்பது வழக்கம். இந்நிலையில் பப்ஜி கேம் விளையாட்டு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.