• March
    28
    Saturday

Main Area

Main



டிவி பார்ப்பதில் ஏற்பட்ட பிரச்னை: தூக்கில் தொங்கிய மாணவர்!?

தற்கொலை
தற்கொலை

சென்னை: வீட்டில் டிவி பார்ப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கோட்டூர்புரத்தை  சேர்ந்த  ராபர்ட் வில்லியம் மகன் பெய்லி சில்வன். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25 ஆம் தேதி பெய்லி சில்வன் தன்னுடைய அக்கா மற்றும் தம்பியுடன் டிவி பார்த்து கொண்டிருந்தார்.

suicide

அப்போது எந்த சேனல் பார்ப்பது என்று இவர்கள் மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சண்டை உச்சகட்ட நிலைக்கு செல்ல ஆத்திரமடைந்த பெய்லி, டிவி ரிமோட்டை தரையில் போட்டு உடைத்துள்ளார். பின்பு அங்கிருந்து சென்றுள்ளார்.

கோபத்தில் இருந்த மகன் நண்பர்களை பார்க்க சென்றிருக்கலாம் என்று அவரது பெற்றோர் நினைத்து கொள்ள வெகுநேரமாகியும் பெய்லி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மூன்றாவது மாடியில் இருக்கும் அறையில் இருக்கிறானா? என்று சந்தேகத்துடன் சென்று பார்க்க, கதவு உள்பக்கம் பூட்டி இருந்துள்ளது.

suicide

இதையடுத்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது மாணவர் பெய்லி தூக்கில்  பிணமாக தொங்கியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.