செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த பெற்றோர்… வேதனையில் கல்லூரி மாணவர் தற்கொலை!

 

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த பெற்றோர்… வேதனையில் கல்லூரி மாணவர் தற்கொலை!

தென்காசி

சங்கரன்கோவில் அருகே செல்போனில் வீடியோ கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள தேவர்குளம் அடுத்த முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் மகாராஜன். இவரது மகன் மூர்த்தி (19). இவர் கோவில்பட்டி அரசுக் கலைக் கல்லூரியில் பி.பி.ஏ., 2ஆம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்த மூர்த்தி, செல்போனில் அடிக்கடி வீடியோ கேம் விளையாடி வந்துள்ளார்.

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த பெற்றோர்… வேதனையில் கல்லூரி மாணவர் தற்கொலை!

இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி வீடீயோ கேம் விளையாடுவது தொடர்பாக மூர்த்திக்கும், இவரது பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த அவர் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி மூர்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து தேவர்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.