கல்லூரி மாணவர் சேர்க்கை : முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

 

கல்லூரி மாணவர் சேர்க்கை : முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கல்லூரி மாணவர் சேர்க்கை : முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

இந்நிலையில் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் ஆலோசனையில் உயர் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை வெளியிடப்பட்டுள்ள நிலையில் கல்லூரி சேர்க்கை குறித்து முதலமைச்சர் ஆலோசனை செய்து வருகிறார். ஜூலை இரண்டாவது வாரத்தில் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் மாணவர் சேர்க்கையை எப்படி நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

கல்லூரி மாணவர் சேர்க்கை : முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

கொரோனா காரணமாக பொருளாதார நிலைமை மோசமாக உள்ளதால் மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் உள்ளிட்டவற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பொறியியல், கலை, அறிவியல் கல்லூரி, பாலிடெனிக் வகுப்புகளில் சேர வாய்ப்புள்ளது என்பதால் இதுகுறித்து கல்லூரிகளில் இடங்களை அதிகரிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.