கல்லூரிகள் திறப்பது குறித்து விதிமுறைகள் வெளியீடு!

 

கல்லூரிகள் திறப்பது குறித்து விதிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7 முதல் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மீன்வளம் உள்ளிட்டவற்றில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் மற்றும் கல்லூரி விடுதிகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கால்நடை, பாலிடெக்னிக், அரசு மற்று தனியார் பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்டவை திறக்கப்பட இருக்கின்றன

கல்லூரிகள் திறப்பது குறித்து விதிமுறைகள் வெளியீடு!

இந்நிலையில் கல்லூரிகள் திறப்பது குறித்து விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை,

*மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்

*சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும்

*மாணவர்கள் அவசியம் முகக்கவசம் அணியவேண்டும்

*வாரத்திற்கு ஆறு நாட்கள் கல்லூரி நாட்கள்

*அறிகுறிகள் இருக்கும் மாணவர்களுக்கு அனுமதி கிடையாது

*நீச்சல் குளங்கள் மூடப்பட வேண்டும்

*விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே இருக்க வேண்டும்

*அறைகளை மாணவர்கள் பகிர்ந்து கொள்ளக் கூடாது

*முடிந்தவரை கல்லூரிகளுக்கு அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளில் வெளியூர் மாணவர்கள் தங்கலாம்

*மாணவர்களின் செல்பேசியில் ஆரோக்கிய சேது செயலி அவசியம் இருக்க வேண்டும்.