முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு எப்போது? – அமைச்சர் பதில்!

 

முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு எப்போது? – அமைச்சர் பதில்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட கல்லூரிகள், டிசம்பர் மாதம் திறக்கப்பட்டன. இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், மற்ற ஆண்டு மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதனிடையே, முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டது. முதலாமாண்டு மாணவர்கள் இன்னும் கல்லூரிக்கு செல்லாத நிலையில், ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு எப்போது? – அமைச்சர் பதில்!

இந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எப்போது கல்லூரிகள் திறப்பு என்பது பற்றி 2 நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பிரபல செய்தி நிறுவனத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

பொறியியல், கலை & அறிவியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் திறப்பு தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் வீதம் காலை, மாலை என 2 வேளைகள் பாடம் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.