தூத்துக்குடி வாக்குச்சாவடி மையங்களில், ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!

தூத்துக்குடி வாக்குச்சாவடி மையங்களில், ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாடி மையங்களை, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட புனித லாசல் மேல்நிலைப்பள்ளி, காரபேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திநகர் இந்து அரிசன தொடக்கப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாடி மையங்களை அவர் பார்வையிட்டார்.

தூத்துக்குடி வாக்குச்சாவடி மையங்களில், ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!

இந்த ஆய்வின்போது, வாக்காளர்களுக்கு போதிய இடவசதி செய்வது குறித்தும், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ரேம்ப் வசதி மற்றும் குடிநீர், கழிப்பறை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் செந்தில்ராஜ், 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை 2 ஆக பிரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதன் பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 97 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

தூத்துக்குடி வாக்குச்சாவடி மையங்களில், ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!

மாவட்டத்தில் 247 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாக தெரிவித்த ஆட்சியர் செந்தில்ராஜ், இவற்றில் காவல்துறையினரின் ஆலோசனைப்படி கூடுதல் பாதுகாப்பு வசதி செய்துதரப்படும் என்றும் கூறினார்.