கடலூர் வெடி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கினார் ஆட்சியர்!

 

கடலூர் வெடி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கினார் ஆட்சியர்!

கடலூர் மாவட்டம் குறுங்குடி கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிதியுதவி வழங்கினார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு தயாரிக்கப்பட்டு வந்த நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில், படுகாயம் அடைந்த 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதுமட்டுமில்லாமல் வெடி விபத்தில் கட்டிடம் தரைமட்டமானதால், சில பெண்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

கடலூர் வெடி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கினார் ஆட்சியர்!

தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கி இருந்த பெண்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மேலும் 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த பெண்கள் சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

அதன் படி இன்று குறுங்குடி கிராமத்துக்கு சென்ற கடலூர் மாவட்ட ஆட்சியர், ரூ.2 லட்சம் தொகையை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார். மேலும், அந்த குடும்பங்களுக்கு தனது ஆறுதல்களையும் தெரிவித்தார்.