நீலகிரியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்த ஆட்சியர்!

 

நீலகிரியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்த ஆட்சியர்!

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டுமென ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கேட்டுகொண்டார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் புனித ஸ்டீபன் சர்ச் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் முக கவசம் அந்து உள்ளனரா? என நேற்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திடீரென ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின்போது, முக கவசம் அணியாதவர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்ட அவர், முக கவம் அணியவும் அவர்களை கேட்டுகொண்டார்.

நீலகிரியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்த ஆட்சியர்!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் முக கவசம் அணியாமல் செல்வதை கண்காணிக்க நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கூடுதலாக குழுக்கள் அமைத்து, கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்துபேசிய அவர், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும், முக கவசம் அணிவதுடன் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனகேட்டுகொண்டார்.