கோவை மாவட்டத்தில் மேலும் 1,049 ஹெக்டேர் நிலங்களை வனப்பகுதியாக அறிவித்த ஆட்சியர்!

 

கோவை மாவட்டத்தில் மேலும் 1,049 ஹெக்டேர் நிலங்களை வனப்பகுதியாக அறிவித்த ஆட்சியர்!

கோவை

கோவை மாவட்டத்தில் மேலும் 1,049 ஹெக்டேர் நிலங்களை வனப்பகுதியாக அறிவித்து, மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டு உள்ளார்.

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே, 1,22,215 ஹெக்டேர் நிலங்கள் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 1882ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டத்தின் பிரிவு 26ன் கீழ் வருவாய் மறறும் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 1,049 ஹெக்டேர் நலங்களை வனப்பகுதியாக அறிவித்து, மாவட்ட ஆட்சியர் நாகராஜ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

கோவை மாவட்டத்தில் மேலும் 1,049 ஹெக்டேர் நிலங்களை வனப்பகுதியாக அறிவித்த ஆட்சியர்!

இந்த நிலங்கள் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட 3 தாலுகாவிற்கு உட்பட் 8 கிராமங்களில் இடம்பெற்று உள்ளன. இதன் மூலம், கோவை மாவட்டத்தின் மொத்த வனப்பரப்பு 1,23,264 ஹெடேராக உயர்ந்துள்ளது. அதேபோன்று, தனியார் வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் கல்லார் யானை வழித்தடத்தை பாதுகாக்க அந்த பகுதியில் வனத்திற்கு நடுவே அமைந்துள்ள சுமார் 50.79 ஹெக்டேர் தனியார் நிலங்களை தனியார் வனமாகவும் ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு வனத்துறையினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உளளனர். மேலும், தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆட்சியர் நாகராஜனை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து, புத்தகத்தை பரிசாக வழங்கினார்.