மதுரை மாவட்ட பட்டாசு ஆலைகளில், ஆட்சியர் அன்பழகன் திடீர் ஆய்வு

 

மதுரை மாவட்ட பட்டாசு ஆலைகளில், ஆட்சியர் அன்பழகன் திடீர் ஆய்வு

மதுரை

மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் இன்று ஆட்சியர் அன்பழகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உசிலம்பட்டி அருகேயுள்ள வடக்கம்பட்டி பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அன்பழகன், அங்கு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா? என்றும், அரசின் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப் படுகிறதா? என்றும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் அன்பழகன், சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தின் காரணமாக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள 13 பட்டாசு ஆலைகளில் இன்று ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார். இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை விரைவில் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிததார்.

மதுரை மாவட்ட பட்டாசு ஆலைகளில், ஆட்சியர் அன்பழகன் திடீர் ஆய்வு

விருநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து மட்டுமல்லாது, பட்டாசு ஆலை விபத்துக்கள் ஒரு சிலரின் கவனகுறைவு காரணமாகவே நடந்துள்ளதாக கூறிய அவர், பட்டாசு ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் செல்பேன் பயன்படுத்தாமல் இருப்பதையும், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதையும் உறுதி செய்ய கோட்டாட்சியர் மற்றும் தீயணைப்புத்துறை மூலம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

மேலும், மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காப்பீடு, மருத்துவ பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் அன்பழகன் தெரிவித்தார்.