சாதியை சொல்லி திட்டிக்கொண்டே கூட்டு பாலியல் வன்கொடுமை – மீட்கப்பட்ட புதுப்பெண் கண்ணீர்

 

சாதியை சொல்லி திட்டிக்கொண்டே கூட்டு பாலியல் வன்கொடுமை – மீட்கப்பட்ட புதுப்பெண் கண்ணீர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிபி நகரை சேர்ந்த அந்த 19 வயது இளம்பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்திருக்கிறது. கடந்த புதன்கிழமை அன்று தனது சொந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்பதற்காக அவர் தாய் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

சாதியை சொல்லி திட்டிக்கொண்டே கூட்டு பாலியல் வன்கொடுமை – மீட்கப்பட்ட புதுப்பெண் கண்ணீர்

தாயுடன் திருவிழாவிற்கு சென்று விட்டு நள்ளிரவு 2 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது வழியில் இயற்கை உபாதைக்கு அவர் தாயை ரோட்டில் நிறுத்தி வைத்து விட்டு புதர் மறைவுக்கு சென்றிருக்கிறார். அப்போது சிறிது நேரத்தில் மகளின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. பதறியடித்துக் கொண்டு ஓடி போய் பார்த்திருக்கிறார். அங்கே புதர் மறைவில் மகள் இல்லாதது கண்டு மேலும் பதறி இருக்கிறார்.

அங்குமிங்கும் தேடி பார்த்தும் எங்கும் தன் மகள் இல்லாததால் பதறி அடித்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடி சென்றிருக்கிறார். வீட்டில் உள்ளவர்களிடம் விவரத்தைச் சொல்ல அவர்களும், இதை கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினரும் அந்த பகுதிக்கு வந்தனர். மகள் மாயமாக போன அந்த இடத்தைச் சுற்றிலும் அலசி ஆராய்ந்தனர். அப்படியே தேடிக்கொண்டே போய்க் கொண்டிருந்த போது அருகில் இருந்த கரும்பு காட்டுக்குள் முனகல் சத்தம் கேட்க அங்கே ஓடிப்போய் பார்த்தபோது மயக்கத்தில் முனகி கொண்டிருந்திருக்கிறார்.

சாதியை சொல்லி திட்டிக்கொண்டே கூட்டு பாலியல் வன்கொடுமை – மீட்கப்பட்ட புதுப்பெண் கண்ணீர்

அவரை மீட்டு வந்து அவரிடம் விசாரித்த போது மூன்று பேர் தன்னை இழுத்துக் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சாதிப் பெயரைச் சொல்லி திட்டிக்கொண்டே தன்னை வன்கொடுமை செய்ததாகவும் சொல்லி அழுதிருக்கிறார். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்க, தன்னை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரில் இருவரையும் அடையாளம் தெரிந்து அவர்களின் பெயரையும் சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து அவர்கள் இருவரும் உடனே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை செய்ததோடு அல்லாமல் சாதிப் பெயரைச் சொல்லி கேவலமாக திட்டி இருக்கிறார்கள். இதையடுத்து மூன்று பேரையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து வலியுறுத்தப்படுகிறது.