கோல்கேட்-பாமோலிவ் நிகர லாபம் ரூ.233 கோடி… வருவாய் 12 சதவீதம் அதிகரிப்பு.

கோல்கேட்-பாமோலிவ் நிகர லாபம் ரூ.233 கோடி… வருவாய் 12 சதவீதம் அதிகரிப்பு.

கோல்கேட்-பாமோலிவ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.233.2 கோடி ஈட்டியுள்ளது.

வாய் பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான கோல்கேட்-பாமோலிவ் (இந்தியா) கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. கோல்கேட்-பாமோலிவ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.233.2 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 17.7 சதவீதம் அதிகமாகும்.. 2020 ஜூன் காலாண்டில் (2020 ஏப்ரல்-ஜூன்) கோல்கேட் பாமோலிவ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.198.2 கோடி ஈட்டியுள்ளது.

கோல்கேட்-பாமோலிவ் நிகர லாபம் ரூ.233 கோடி… வருவாய் 12 சதவீதம் அதிகரிப்பு.
கோல்கேட்-பாமோலிவ்

2021 ஜூன் காலாண்டில் கோல்கேட்-பாமோலிவ் நிறுவனம் வருவாயாக ரூ.1,165 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் கோல்கேட் -பாமாலிவ் நிறுவனம் வருவாயாக ரூ.1,040 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

கோல்கேட்-பாமோலிவ் நிகர லாபம் ரூ.233 கோடி… வருவாய் 12 சதவீதம் அதிகரிப்பு.
கோல்கேட்-பாமோலிவ் தயாரிப்புகள்

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது, கோல்கேட்-பாமோலிவ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.54 சதவீதம் குறைந்து ரூ.1,677.95ஆக இருந்தது.