விற்பனை குறைந்தாலும் லாபத்தை அள்ளிய கோல்கேட்…. லாபம் ரூ.204 கோடியாக உயர்வு…

 

விற்பனை குறைந்தாலும் லாபத்தை அள்ளிய கோல்கேட்…. லாபம் ரூ.204 கோடியாக உயர்வு…

கோல்கேட்-பாமோலிவ் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.204 கோடியாக உயர்ந்துள்ளது.

வாய் பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான கோல்கேட்-பாமோலிவ் (இந்தியா) கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் கோல்கேட்-பாமோலிவ் நிறுவனத்தின் வருவாய் குறைந்துள்ளபோதிலும் லாபம் சிறிது அதிகரித்துள்ளது. 2020 மார்ச் காலாண்டில் (2020 ஜனவரி-மார்ச்) கோல்கேட் பாமோலிவ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.204 கோடி ஈட்டியுள்ளது.

விற்பனை குறைந்தாலும் லாபத்தை அள்ளிய கோல்கேட்…. லாபம் ரூ.204 கோடியாக உயர்வு…

2019 மார்ச் காலாண்டில் கோல்கேட்-பாமோலிவ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.198 கோடி ஈட்டியிருந்தது. ஆக, 2020 மார்ச் காலாண்டில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் 3 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020 மார்ச் காலாண்டில் கோல்கேட்-பாமோலிவ் நிறுவனத்தின் வருவாய் 7.4 சதவீதம் குறைந்து ரூ.1,062 கோடியாக சரிவடைந்துள்ளது. கோல்கேட்-பாமோலிவ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கடந்த நிதியாண்டுக்கு முதலீட்டாளர்களுக்கு இடைக்கால டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.16 வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

விற்பனை குறைந்தாலும் லாபத்தை அள்ளிய கோல்கேட்…. லாபம் ரூ.204 கோடியாக உயர்வு…

கோல்கேட்-பாமோலிவ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராம் ராகவன் கூறுகையில், கோவிட்-19 தொற்றுநோய் எங்களை வித்தியாசமாக யோசிக்க, செயல்பட மற்றும் நடக்க வேண்டியதற்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களது நிதிநிலை முடிவுகளில் காணப்பட்டதுபோல் லாக்டவுன் எங்களது வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் எங்களது நுகர்வோர், வாடிக்கையாளர்கள், வர்த்தக கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுப்போம் என தெரிவித்தார்.