ரஷ்யாவின் தில்லாலங்கடி… கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மீதான பனிப்போர்.

 

ரஷ்யாவின் தில்லாலங்கடி… கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மீதான பனிப்போர்.

உலகமே கொரோனாவைரஸ் தடுப்பு மருந்துக்காக காத்துக் கொண்டு இருக்கும் இச்சூழலில் ரஷ்ய சைபர் தாக்குதல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்ள் அதிர்ச்சியளிக்கிறது.
இதைப் பற்றி இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம், கனடாவின் தகவல் தொடர்பு பாதுகாப்பு அமைப்பு மற்றும் அமெரிக்க சைபர் பாதுகாப்பு உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் மற்றும் தேசிய பாதுகாப்பு முகமை ஆகிய வற்றிலிருந்து ஒரு கூட்டு அறிக்கையில், ரஷ்ய ஹேக்கர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து முயற்சிகள் பற்றிய தகவல்களை திருடமுயற்சிப்பதற்கு காரணம் சுகாதார மற்றும் எரிசக்தி துறைகளுக்கு எதிராக சைபர் தாக்குதல்களை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ரஷ்யாவின் தில்லாலங்கடி… கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மீதான பனிப்போர்.
Cozy Bear என்ற சைபர் அமைப்பு இதற்கு காரணம் என்றும் , அவர்கள் விட்டுச் சென்ற தடத்தை வைத்து தெரிந்து கொண்டதாகவும், மேலும் இவர்கள் ரஷ்ய அரசுடன் நல்ல இணைப்புகள் உள்ளதாக தெரிவித்தனர்..

ரஷ்யாவின் பதில்:
இதற்கு ரஷ்ய தூதரகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. அந்நாட்டின் தடுப்பூசி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ரஷ்ய இறையாண்மை செல்வ நிதியத்தின் தலைவர், ஹேக்கிங் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார், kremlin ம் அதை மறுத்தார்.

COVID-19 தடுப்பூசி ஆராய்ச்சி பற்றிய தகவல்களைத் திருட ஹேக்கர்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நாடு ரஷ்யா மட்டுமே அல்ல.மே மாதம், சீன ஹேக்கர்கள் கொரோனாவைரஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சியை திருட முயற்சி செய்து கொண்டுள்ளனர் என்று FBI கூறியுள்ளது. அதே நேரத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், வியட்நாமிய ஹேக்கர்கள் கொரோனா வைரஸ் பரவலை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய தகவல்களுக்காக சீன அரசாங்கத்தை இலக்கு வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர்.

ரஷ்யாவின் தில்லாலங்கடி… கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மீதான பனிப்போர்.

அமெரிக்கா கூறியது என்ன?
NSA சைபர்-பாதுகாப்பு இயக்குனர் Anne Neuberger கூறுகையில் “தேசிய பாதுகாப்பு ஏஜென்சி, எங்கள் குழுவுடன் சேர்ந்து, இந்த முக்கியமான சைபர் பாதுகாப்பு ஆலோசனையை கூட்டாக வெளியிடுவதன் மூலம் ,தேசிய பாதுகாப்பை பாதுகாப்பதற்கான அதன் அர்ப்பணிப்பில் உறுதியாக உள்ளது, வெளிநாட்டு ஹேக்கர்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் கோவிட்-19 தொற்றுநோயை சாதகமாக்கிக் கொள்கின்றனர்,”
அமெரிக்கா, UK., சீனா மற்றும் பிற நாடுகளைப் போல விரைவாக தடுப்பூசிகளை உருவாக்க அனுமதிக்கும் அறிவியல் உள்கட்டமைப்பில் ரஷ்யா முதலீடு செய்யவில்லை என்று புளோரிடாவை தளமாகக் கொண்ட சைபர் பாதுகாப்பு நிறுவனமான Focal Point Data Riss இன் ஆலோசனை சேவைகளின் செயல் துணைத் தலைவர் Michael Ebert தெரிவித்தார்.

ரஷ்யாவின் தில்லாலங்கடி… கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மீதான பனிப்போர்.
அமெரிக்க உளவுத்துறையில் பணியாற்றும் டிமர்ஸ் மற்றும் மற்றவர்கள் எல்லா மென்பொருள் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இவ்வாறு பல எதிர்புகளும் கன்டனங்களும் ரஷ்யா மீது வலுக்கின்றது.இதன் மூலம் அமெரிக்கா ரஷ்யாவை எச்சரிக்கின்றது.
இவை அனைத்துமே உலக அரங்கில் யார் முதலில் Covid-19 க்காக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது எனும் போட்டி. முதல் நாடு தடுப்பூசி யைக் கண்டுபிடித்தால் உலக அரங்கில் ஈர்ப்பு பெறும், அதன் மூலம் தங்கள் நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்கின்றனர்.இதுவே பனிப்போரின் தொடக்கம்……..

குறள்:
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு

விளக்கம்:
முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.