கடன் தகராறில் இளைஞர் கொலை – திருநங்கைகள் உட்பட 3 பேர் கைது

 

கடன் தகராறில் இளைஞர் கொலை – திருநங்கைகள் உட்பட 3 பேர் கைது

கோவை

கோவையில் கடன் தகராறில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருநங்கைகள் உட்பட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். கோவை தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (27). இவர் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு

கடன் தகராறில் இளைஞர் கொலை – திருநங்கைகள் உட்பட 3 பேர் கைது

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவரிடம் மைக்கேல் என்பவர் தனது ஆட்டோவின் ஆவணங்களை கொடுத்து 38 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மைக்கல் திருப்பிசெலுத்திய நிலையில், இளங்கோவனின் தாயார் பாக்கியலட்சுமி மைக்கேலை தொடர்புகொண்டு ஆயிரம் ரூபாய் குறைவாக உள்ளதாக கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மைக்கேல், இளங்கோவனின் தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து, மைக்கல், தனது நண்பர்களான திருநங்கைகள் ராகிணி, வெண்பா ஆகியோருடன் சென்று இளங்கோவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ராகிணி

கடன் தகராறில் இளைஞர் கொலை – திருநங்கைகள் உட்பட 3 பேர் கைது

கட்டையால் இளங்கோவின் தலையில் அடித்துள்ளார். இதனை தடுக்க முயன்ற இளங்கோவனின் நண்பர் செளந்தர் என்பவரை, மைக்கல் கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து, செளந்தரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இதில் காயமடைந்த இளங்கோவன், கிருபாகரன், அருண் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த பீளமேடு போலீசார், மைக்கல்(24), ராகிணி (32), வெண்பா (23) ஆகியோரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.