தலைகீழாக நடந்து காரை இழுத்த யோகா மாஸ்டர்… அமைச்சருக்கு ஆதரவாக நூதன பிரசாரம்…

 

தலைகீழாக நடந்து காரை இழுத்த யோகா மாஸ்டர்… அமைச்சருக்கு ஆதரவாக நூதன பிரசாரம்…

கோவை

தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து, பிரபல யோகா மாஸ்டர் தலைகீழாக நடந்தபடி காரை இழுத்து நூதன பிரசாரம் மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகளும், கூட்டணி கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைகீழாக நடந்து காரை இழுத்த யோகா மாஸ்டர்… அமைச்சருக்கு ஆதரவாக நூதன பிரசாரம்…

அதன் ஒரு பகுதியாக கோவையை சேர்ந்த பிரபல யோகா மாஸ்டர் சத்திரபதி என்பவர், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 1 டன் எடையிலான காரை சங்கிலியால் தனது வயிற்றில் பிணைத்தவாறு தலைகீழாக நடந்தபடி 234 மீட்டருக்கு காரை இழுத்து நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தொண்டாமுத்தூரில் அமைச்சர் மேலுமணி மிகப்பெரிய வெற்றி பெறவும், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறவும் வலியுறுத்தி இந்த நூதன வாக்குசேகரிப்பில் ஈடுபட்டதாக சத்திரபதி தெரிவித்துள்ளார். அவரது இந்த நூதன பிரசாரம் கோவை மாவட்ட மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.