கோவை வாக்கு எண்ணும் மையத்தில், 150 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு!

 

கோவை வாக்கு எண்ணும் மையத்தில், 150 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு!

கோவை

கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜிசிடி பொறியியல் கல்லூரி வளாகம் 150 சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப் பதிவான, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று முன்தினம் இரவு வைக்கப்பட்டது. தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் அறைகள், மாவட்ட ஆட்சியர் நாகராஜன், தேர்தல் பார்வையாளர்கள், மாநகர காவல் ஆணையர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டது.

கோவை வாக்கு எண்ணும் மையத்தில், 150 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு!

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ள நிலையில், இதில் துணை ராணுவத்தினர், மாவட்ட போலீசார் என 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்ளில் 70 சிசிடிவி கேமராக்களும், கல்லூரி வளாகத்தில் 80 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது.

அதில் பதிவாகும் காட்சிகளை பிரம்மாண்ட டிவி திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், வேட்பாளர்களின் முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள அறைகளில் 24 மணிநேரமும், சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.