சித்தாபுதூர் அய்யப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலம்

சித்தாபுதூர் அய்யப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலம்

கோவை

விஜயதசமியை ஒட்டி, கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோயிலில் வித்யாரம்பம் எனம் ஏடு துவங்குதல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தங்களது குழந்தைகளுடன்

சித்தாபுதூர் அய்யப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலம்

வந்து, இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதனால், அங்கு மக்கள் கூட்டம் அலை மோதியது. கேரளாவில் இருந்து வந்து கலந்துகொள்ளும் வித்யாரம்பம் நிகழ்வில், குழந்தைகளின் விரல் பிடித்து எழுதுபவர்களின் எண்ணிக்கை

சித்தாபுதூர் அய்யப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலம்

குறைவாக இருந்தால் ஏராளமானோர் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கொரானா அச்சுறுத்தல காரணமாக, நடப்பு ஆண்டு குழந்தைகளின் நாவில் எழுதுவதை தவிர்த்த கோவில் நிர்வாகம், தட்டில் பரப்பி வைக்கபட்டிருந்த அரிசியில் ஏடு எழுத மட்டுமே அனுமதி வழங்கியது.

சித்தாபுதூர் அய்யப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலம்

முன்னதாக, கோவிலுக்கு வருவோருக்கு உடல் வெப்ப சோதனை செய்யபட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது. கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் காத்திருக்க வேண்டிய நிலை இருந்ததாகவும், குறைந்த அளவிலான நம்பூதரிகள் இருந்ததே இதற்கு காரணம் என்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.