“அதிமுகவுக்கு கிடைத்த முதல் வெற்றி” உற்சாகத்தில் தொண்டர்கள்!

 

“அதிமுகவுக்கு கிடைத்த முதல் வெற்றி” உற்சாகத்தில் தொண்டர்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் திமுக கூட்டணி வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. திமுக கூட்டணிக்கு 152 இடங்களில் முன்னிலை கிடைத்துள்ள நிலையில், அதிமுக கூட்டணி 81 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விவரங்களும் தேர்தல் ஆணையத்தினால் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.

“அதிமுகவுக்கு கிடைத்த முதல் வெற்றி” உற்சாகத்தில் தொண்டர்கள்!

கோயம்புத்தூர் தொகுதியில் கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம் ,பொள்ளாச்சி, சிங்காநல்லூர், சூலூர் ,தொண்டாமுத்தூர், வால்பாறை ஆகிய தொகுதிகள் உள்ளன. இதில் வால்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் அமுல் கந்தசாமி போட்டியிட்டார். அதேபோல திமுக கூட்டணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆறுமுகம், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த முருகராஜ் ,நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கோகிலா ,மக்கள் நீதி மையம் கட்சியை சேர்ந்த செந்தில் ராஜ், சுயேட்சை வேட்பாளர் ரங்கசாமி உள்ளிட்ட 6 பேர் கலந்து கொண்டனர்.

“அதிமுகவுக்கு கிடைத்த முதல் வெற்றி” உற்சாகத்தில் தொண்டர்கள்!

இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அமுல் கந்தசாமி, 66,474 வாக்குகளும், ஆறுமுகம், 53,309 வாக்குகளும் பெற்ற நிலையில் அமுல் கந்தசாமி 13,165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.