வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்த இருவர் கைது – காதல்ஜோடிக்கு உதவியபோது சிக்கினர்

வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்த இருவர் கைது – காதல்ஜோடிக்கு உதவியபோது சிக்கினர்

கோவை

கோவையில் 2000 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்ற 2 இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர். காதல்ஜோடிக்கு
உதவமுயன்று, அவர்கள் போலீசிடம் சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டையில் மாயமான காதல்ஜோடி ஒன்று, கோவை சேரன்மாநகர் பகுதியில் உள்ள வீட்டில் தங்கியுள்ளதாக பீளமேடு போலீசாருக்கு

வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்த இருவர் கைது – காதல்ஜோடிக்கு உதவியபோது சிக்கினர்

தகவல் கிடைத்தது. குறிப்பட்ட வீட்டிற்கு நேரில் சென்ற போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனையிட்ட போது, ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் 4 கட்டுகள் இருப்பது தெரியவந்தது. சுமார் 7.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், வீட்டில் தங்கியிருந்த காதல் ஜோடி மற்றும் அவருடன் தங்கியிருந்த நபர்கள் குறித்தும் விசாரித்து வந்தனர். இதில், நாமக்கல்லை சேர்ந்த தீப்சித்(24)

வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்த இருவர் கைது – காதல்ஜோடிக்கு உதவியபோது சிக்கினர்

என்பவர் வீட்டிலேயே வெப்டிசைனிங் சென்டர் நடத்தி வந்ததாகவும், அதில் புதுக்கோட்டை சேர்ந்த ராகவேந்திரன்(21) என்பவர் பணிசெய்து வந்ததும் தெரியவந்தது. கொரோனா காரணமாக வருமானம் இன்றி தவித்து வந்த இருவரும், போலி 2000 ரூபாய் நோட்டுகளை வெப் டிசைனிங் உதவியுடன்

வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்த இருவர் கைது – காதல்ஜோடிக்கு உதவியபோது சிக்கினர்

தயாரித்ததும் தெரியவந்தது. இந்நிலையில், புதுக்கோட்டையில் காதல் திருமணம் செய்து கொண்டு கோவை வந்த தனது நண்பருக்கு, ராகவேந்திரன் உதவி செய்தபோது, போலி ரூபாய் நோட்டு விவகாரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 2 பேரையும் கைதுசெய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.