தினசரி கொரோனா பாதிப்பில் சென்னையை மிஞ்சிய கோவை!

 

தினசரி கொரோனா பாதிப்பில் சென்னையை மிஞ்சிய கோவை!

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு எதிரொலியால் தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் தலைநகர் சென்னைக்கு அடுத்து, அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் அதிகளவு கொரோனா பாதிப்புகள் பதிவாகின. ஆனால் அண்மை காலமாக அந்த இடத்தை கோவை பிடித்துள்ளது. சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்துவர, கோவையில் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

தினசரி கொரோனா பாதிப்பில் சென்னையை மிஞ்சிய கோவை!

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி சென்னையில் நேற்று முன் தினம் 4,985 பேரும், கோவையில் 4,277 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று கோவையில் 3,632 பேரும், சென்னையில் 4,041 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் இன்று கோவையில் 4,268பேரும்,
சென்னையில் 3,561 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் கோவையில் புதிதாக சுமார் 15 ஆயிரம் பேர் புதிதாக தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஆனால் இறப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து சென்னையே முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்று 98 பேர் உயிரிழந்த நிலையில், கோவையில் வெறும் 31 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, சென்னையில் 47,498 பேரும், கோவையில் 34,257 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.