“அரசு மருத்துவமனையில் 25 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை” – டீன் காளிதாஸ்

“அரசு மருத்துவமனையில் 25 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை” – டீன் காளிதாஸ்

கோவை

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காலத்தில், அதிகளவு குழந்தைகள் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் தெரிவித்துள்ளார். கோவையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா சிகிச்சை தனியாக நடைபெற்று வந்தாலும், மற்ற சிகிச்சைகள் வழக்கம்போல நடைபெற்று வருவதாக தெரிவித்தார். குறிப்பாக

“அரசு மருத்துவமனையில் 25 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை” – டீன் காளிதாஸ்

குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பிரிவில் கடத்த ஒரு மாத்தில் மட்டும் பல்வேறு உடல் பாதிப்புகளுடன் இருந்த 25 குழந்தைகள் காப்பாற்றப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை பெரியளவில அதிகரித்து இருப்பதாகவும், அதனால் குழந்தைகளுக்கு பிரச்சினைகளும் அதிகமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“அரசு மருத்துவமனையில் 25 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை” – டீன் காளிதாஸ்

மேலும், குழந்தைகள் வீட்டில் இருப்பதால் குறும்புதனம் செய்து ஏற்படும் பாதிப்புகளையும், குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவு மூலம் சிறப்பாக கையாண்டதாகவும், ஒரே மாதத்தில் அதிகபட்சமாக குழந்தைகள் அறுவை சிகிச்சை தற்போது நடைபெற்று இருப்பதாகவும் காளிதாஸ் தெரிவித்தார்.