ஆன்லைன் காலில் புகாரை எடுத்துக்கொள்ளும் கோவை எஸ்.பி! – மக்கள் பாராட்டு

 

ஆன்லைன் காலில் புகாரை எடுத்துக்கொள்ளும் கோவை எஸ்.பி! – மக்கள் பாராட்டு

கோவை காவல்துறை கண்காணிப்பாளர் புகார்களை ஆன்லைன் காலில் விசாரித்து நடவடிக்கை எடுப்பது பாராட்டைப் பெற்று வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து ஒட்டுமொத்த காவல் துறை மீதும் சிலர் தவறான தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த நிலையில் கோவை எஸ்.பி சுஜித் குமார், மக்களின் புகார் தொடர்பாக வீடியோ காலில் அவர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வருவது வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆன்லைன் காலில் புகாரை எடுத்துக்கொள்ளும் கோவை எஸ்.பி! – மக்கள் பாராட்டுகாவல் நிலையங்களுக்கு வரும் மக்கள் மூலமாக போலீசாருக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வீடியோ கால் வசதியை கோவை எஸ்.பி அறிமுகம் செய்துள்ளார். முதல் கட்டமாக தன்னிடம் அலுவலகம் வந்து தன்னிடம் புகார் கூற விரும்பும் மக்களை அவர் வீடியோ கால் மூலமாக சந்தித்து விசாரணை நடத்தி வருகிறார்.
கொரோனா காரணமாக பல உயர் அதிகாரிகளை சந்திக்க முடியாத நிலை உள்ள போது, மக்கள் வீடியோ கால் மூலம் நேரடியாக எஸ்.பி-யிடம் புகார் தெரிவிக்கும் நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.