பொதுமக்கள் மீது தடியடி : எஸ்.ஐ முத்து சஸ்பெண்ட்!

 

பொதுமக்கள் மீது தடியடி : எஸ்.ஐ முத்து சஸ்பெண்ட்!

கோவை காந்திரபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமாக உணவகம் இயங்கி வருகிறது. கொரோனா கட்டுப்பாட்டை மீறி இரவு 10 மணிக்கு மேலாக உணவகம் திறந்து இருந்ததாக தெரிகிறது. அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து, கடைக்குள் நுழைந்து ஊழியர்கள் மற்றும் அங்கு உணவு அருந்தியவர்களை தாக்கினார்.

பொதுமக்கள் மீது தடியடி : எஸ்.ஐ முத்து சஸ்பெண்ட்!

எஸ்.ஐ.முத்து தாக்குதல் நடத்தியதில் உணவக ஊழியர்கள் மற்றும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதற்கான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலானது. இது பலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் மனித உரிமை ஆணையம் வரை சென்றது. . இதுகுறித்து கோவை காவல் ஆணையருக்கு விளக்கம் கேட்டு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இது குறித்து உணவக உரிமையாளர் மோகன்ராஜ், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதத்திடம் புகார் அளித்தார். இதனால் உதவி ஆய்வாளர் முத்துவை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி காவல் உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

பொதுமக்கள் மீது தடியடி : எஸ்.ஐ முத்து சஸ்பெண்ட்!

இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலில் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் எஸ்.ஐ முத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டது விமர்சிக்கப்பட்ட நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.