பூட்டிய வீட்டில் ரூ.7.36 லட்சம், போலி ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்

 

பூட்டிய வீட்டில் ரூ.7.36 லட்சம், போலி ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்

கோவை

கோவையில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 7.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி 2000 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து
வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் சமீபத்தில் மாயமானார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் புகாரின் பேரில்
சிறுமியை கடத்தியதாக சிவகாசியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

பூட்டிய வீட்டில் ரூ.7.36 லட்சம், போலி ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்

இந்நிலையில், ரஞ்சித்குமார் கோவை பீளமேடு சேரன் மாநகர் அருகே உள்ள குமரன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, பீளமேடு போலீசார் அங்கு சென்றபோது வீடு பூட்டியிருந்த நிலையில், பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டினுள் போலி 2000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, 7 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான போலி 2000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து, தடவியல் பரிசோதனைக்கு அனுப்பினர்.

பூட்டிய வீட்டில் ரூ.7.36 லட்சம், போலி ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்

இதுகுறித்து வழக்குப்பதிவு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரூபாய் நோட்டு அச்சடிக்கும் தாள்களை வரவழைத்து, அசல் ரூபாய் நோட்டுகளை பிரதி எடுத்து போலி ரூபாய் நோட்டுகளை உருவாக்கியிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போலி ரூபாய்நோட்டுகளை அச்சடித்த ரஞ்சித்குமார் மற்றும் மாயமான சிறுமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.